Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவசேனாவின் சிவன் வடை கடைக்கு போட்டியாக, மும்பை மாநகராட்சி சார்பில் நமோ டீஸ்டால்!

மும்பை: மும்பையில் சிவசேனா நடத்தி வரும் சிவன் வடை கடைக்கு போட்டியாக மாநகராட்சி சார்பில் பா.ஜ.க.வினர் நமோ டீக்கடை திறக்கப்படவுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க.வினர் நமோ டீஸ்டால்களை திறந்தனர். ஆனால், தேர்தலுக்கு பிறகு இந்த கடைகள் செயல்படுவதாக தெரியவில்லை.

இதேபோல், மும்பையில் சிவசேனா கட்சியினர் தங்களது கட்சியை மக்களிடையே பலப்படுத்தும் வகையில் 'சிவன் வடை கடை மற்றும் பாவ' உணவகங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மும்பை மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.க.வினர் இவர்களுக்கு போட்டியாக 'நமோ டீஸ்டால்'களை மாநகராட்சி சார்பில் திறக்க முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி பா.ஜ.க தலைவர் மனோஜ் கோடக் கூறுகையில், ''நமோ டீஸ்டால்கள் திறப்பது குறித்து கட்சியினரிடம் விவாதித்து வருகிறோம். அதன்பின்னர் இந்த தீர்மானத்தை மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெற உள்ளோம். அதன் பின்னர் எந்தவித சட்ட விரோதமும் இல்லாத வகையில் நமோ டீஸ்டால்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்படும்'' என்றார்.

பா.ஜ.க.வின் இந்த முடிவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close