Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரகுராம்ராஜனுக்கு ப.சிதம்பரம் ஆதரவு!

ரகுராம் ராஜன் போன்ற சிறந்த பொருளாதார வல்லுநரை ரிசர்வ் வங்கி ஆளுநராக பெறும் அளவு தற்போதைய அரசு தகுதியானதா என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், 'முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான ரகுராம் ராஜனை ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமித்ததாக தெரிவித்தார்.

வரும் செப்டம்பர் மாதத்துடன் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் பாஜக எம்.பி சுப்பிரமணியசாமியின் கருத்து குறித்து ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ப.சிதம்பரம், பிரதமரோ அல்லது நிதியமைச்சரோ இத்தகைய கருத்தை தெரிவித்தால் அது குறித்து தான் கருத்து தெரிவிப்பதாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி ரகுராம் ராஜனை பணியில் அமர்த்தும் போது அவரை மிகவும் நம்பியதாகவும், தற்போதும் அவரது பணியின் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதாகவும் சிதம்பரம் கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close