Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாம்புகள் ஏற்படுத்திய பரபரப்பு..!

மலபார்: தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பை ராஜநாகம் விழுங்க முயன்றதால் மலபார் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் மலபார் அருகே உள்ள அதிரப்பள்ளி வெற்றிப்பாறையில் தேயிலை தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. இங்குள்ள ஒரு தோட்டத்தில் வேலைக்காக தொழிலாளர்கள் சிலர் சென்றுள்ளனர்.

அப்போது, அந்த தோட்டத்தில் மலைப்பாம்பை ஒரு ராஜநாகம் விழுங்கிக் கொண்டிருந்துள்ளது. இதை கண்ட தொழிலாளர்கள், அதிர்ச்சி அடைந்து உடனே இது குறித்து அதிரப்பள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், இந்த தகவல் காட்டுத்தீப்போல் அப்பகுதியில் பரவ, ராஜநாகத்திடம் மலைப்பாம்பு ஒன்று சிக்கி இருப்பதை காண்பதற்கு அந்த பகுதி மக்கள் பலர் அங்கு திரண்டு வந்துவிட்டனர்.

அப்போது, மலைப்பாம்பை முழுவதுமாக விழுங்க முடியாமல் ராஜநாகம் போராடியது. அதேநேரம், மலைப்பாம்பை வெளியே தள்ள முயன்றும், அது முடியாமல் ராஜநாகம் தவித்து கொண்டிருந்தது.

இந்நிலையில் அங்கு வந்த வனத்துறையினர், ராஜநாகத்தின் தலைப்பகுதியை பிடித்துக்கொண்டு, அதன் வாயில் சிக்கியிருந்த மலைப்பாம்பை மெதுவாக வெளியே எடுத்தனர். அதன்பின், வனத்துறையினர் மலைப்பாம்புக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

ஆனால், கால்நடை மருத்துவர்கள்: சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மலைப்பாம்பு பரிதாபமாக இறந்தது. இதையடுத்து, மலைப்பாம்பின் உடலை சம்பவ இடத்திலேயே பரிசோதனை செய்து புதைத்தனர். மேலும் ராஜநாகத்தை, வனத்துறையினர் அதிரப்பள்ளியில் உள்ள அடர் வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர்

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ''அடர் வனப்பகுதியில் காணப்படும் ராஜநாகங்கள், சில நேரங்களில் உணவுக்காக தோட்டப்பகுதிகளுக்கு வருவதுண்டு. அப்படிதான் இந்த ராஜநாகமும் வந்திருக்க வேண்டும். பிடிபட்ட ராஜநாகம் 10 அடிக்கும் மேல் நீளம் கொண்டது. அதனிடம் சிக்கி கொண்ட மலைப்பாம்பிற்கு வயது குறைவாகதான் இருக்கும். அதனால் தான் மலைப்பாம்பால், ராஜநாகத்திடம் இருந்து தப்பிக்க முடியவில்லை" என்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ