Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினேஷாக மாறுங்கள் ஓட்டுநர்களே....

 

உபெர், ஓலா போன்ற பிரபல நிறுவனங்களின் ஓட்டுநர்கள் ஒழங்கீனமான செயல்களால் சமீப காலமாக சர்ச்சையில் சிக்கிவருகின்றனர். டெல்லியில் இரவுநேர பணி முடிந்து உபெர் டாக்ஸியை அழைத்த நிதிநிறுவன பெண் அதிகாரி அந்த டாக்ஸியின் ஓட்டுநர் ஷிவ்குமார் யாதவ் என்ற கொடியவனால் பலாத்காரம் செய்யப்பட்ட அவலம் தலைநகரை உலுக்கியது.

இப்படி பலாத்காரம் திருட்டு, அதிகமாக பணம் வாங்குவது, வேண்டுமென்றே வேறு வேறு வழிகளில் சென்று வாடிக்கையாளரை ஏமாற்றுவது என்ற தொடர் சர்ச்சைகள் ஏற்படுத்தும் தாக்கம்   ஒன்றே ஒன்றாகத்தான் உள்ளது.

இது ஓட்டுநர்களிடம் சற்று ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற பொதுமனநிலையை மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் உண்மையிலேயே நேர்மையானவர்களின் மீதும் இப்படியான சந்தேகப் பார்வை விழுகிறது.

ஓட்டுநர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான இந்த இறுக்கமான சுவரை சென்னை வாழ் வாகன ஓட்டுநர்கள் சிலர் உடைத்தெறிந்து கொண்டிருக்கிறார்கள்.

உபெர் நிறுவனத்தில் ஓட்டுநரான தினேஷ் குமார் என்பவருக்கு கடந்த வாரத்தில் ஒருநாள் வாடிக்கையாளரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. சென்று பார்த்தால், வண்டியின் டயர் பஞ்சர் ஆனதால், வாடகைக் காரை அந்த வாடிக்கையாளர் அமர்த்தியிருந்தது தெரியவந்தது.

வாடிக்கையாளரான அந்த பிரபல பத்திரிகையாளர் அவசரம் அவசரமாக முக்கியமான மீட்டிங் ஒன்றிற்கு சென்று கொண்டிருந்தபோதுதான், அவரது வண்டியின் டயர் பஞ்சராகி இப்படி அவரை நடுத்தெருவில் நிறுத்திவிட்டது. உடனே சற்றும் தாமதிக்காமல் வண்டியை நிறுத்தி விட்டு உபெர் நிறுவன வண்டியை அழைத்துள்ளார். அடுத்த10 நிமிடத்தில் வண்டியும், வண்டியுடன் ஓட்டுநர் தினேஷ்குமார் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார்.

ஆனால் கார் டயர் பஞ்சர் ஆனதால்தான் தன்னை அழைத்துள்ளார் என புரிந்துகொண்ட தினேஷ்குமார், அந்த இடத்தில் ஓட்டுநராக மட்டும் செயல்படாமல் உடனே, டயரை மாற்றும் வேலையில் இறங்கினார். Jarshad என்ற அந்த பத்திரிகையாளர், டயரை மாற்ற குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும் எனக் கூறினார். ஆனால், தினேஷ் 20 நிமிடத்திற்குள் வண்டியை ஓடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார். வாடிக்கையாளரை பிக் அப் செய்து விட்டுவிட்டு டிப்ஸ்சுடன் சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் வழக்கமான ஓட்டுநராக இல்லாமல் அவருக்கு நிரந்தரமான உதவியை செய்துவிட்டு உதட்டோர புன்னகையுடன் விடைபெற்ற தினேஷின் உள்ளத்தை நினைத்து நெகிழ்கிறார் Jarshad.

 

Facebookல் இதை பதிவு செய்த Jarshad, "தினேஷ் போன்றவர்களால்தான் சென்னை இவ்வளவு பெரிய வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு இவ்வளவு சீக்கிரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது எனத் தோன்றுகிறது!" எனக் குறிப்பிட்டுள்ளார். மனிதநேயத்தை வெளிப்படுத்திய இந்த இச்செய்தி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது வரை, ஏறத்தாழ 837 பேர் இப்பதிவைப் பகிர்ந்துள்ளனர். மேலும் 5,000+ லைக்குகளைக் குவித்திருக்கிறது. தினேஷ், தான் செய்தது வெறும் உதவிதான் எனக் கூறி, Jarshad, கொடுத்த பணத்தைப் பெற மறுத்துவிட்டதும், ஆச்சரித்தை தந்திருக்கிறது!"தினேஷ் நம் சமுதாயத்தின் சொத்து!",  "இவர்தான் நம் சமூகத்தின் உண்மையான ambassador", என தினேஷை வாழ்த்தி கமெண்டுகளை தெறிக்கவிடுகின்றனர் நெட்டிசன்கள்.

இதுபோன்ற சிறு சிறு செயல்கள்தான் நம் வாழ்வின் அர்த்தத்தை உலகிற்கு அடையாளம் காட்டுகின்றன. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமக்குத் திரும்பச் செய்யப்படும். உதவி செய்தல் ஒரு தொற்று வியாதி போல, ஒருவரிடமிருந்து ஒருவருக்கு தொற்றிக்கொள்ளும். கருணை ஒரு வட்டம் போல. கருணை காட்டுபவரை அது வந்து அடைந்தே தீரும்.

இன்றைய உலகிற்கு தினேஷ் போன்றவர்கள் அவசியம்!

- ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிக்கையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ