Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரதமரை திருப்பி அனுப்பிய டெல்லி வானிலை

புதுடெல்லி; கர்நாடகத்தில்பொதுக் கூட்டம் முடிந்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி பயணம் செய்த விமானம் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது.

கர்நாடக மாநிலம் தாவணகெரேயில் பா.ஜ.க வின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார்.

கூட்டம் முடிந்தபின் அவர் கர்நாடகத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். ஆனால் டெல்லியில் மோசமான வானிலை நிலவியதால் விமானம் தரை இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி பிரதமர் மோடி சென்ற விமானம் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வருகை தர இருந்த 27 பிற பயணிகள் விமானங்களும் நேற்று மோசமான வானிலை காரணமாக அருகாமையில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ