Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்க நியமிக்கப்பட்டாரா கிரண்பேடி? -விளக்கும் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கவே கிரண்பேடி நியமிக்கப்பட்டாரா என்பதற்கு நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 17 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி காலாப்பட்டில் இருக்கும் ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேரவை கட்சித் தலைவராக நாராயணசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் என அக்கட்சியின் மேலிடப் பார்வையாளர்களால் அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவுக் கடிதத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி, நாராயணசாமியிடம் வழங்கினார். இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.நமச்சிவாயம் ஆகியோர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் வழங்கினார்கள்.

அதன்பின் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதுச்சேரியில் அமைய உள்ள காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி தருவதற்காகத்தான் மத்திய பா.ஜ.க. அரசு கிரண்பேடியை ஆளுநராக புதுச்சேரிக்கு நியமித்திருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த நாராயணசாமி, ''ஆளுநர் என்பவர் கட்சிக்கு அப்பாற்பட்டவர், நடுநிலையானவர். அவருடன் மோதல் போக்கு எதுவும் ஏற்படாது. நாங்கள் இருவரும் இணைந்து புதுச்சேரியின் வளர்ச்சிக்கு பணிபுரிவோம்" என்றார்.

- ஜெ.முருகன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close