Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எங்கள் உத்தரவை பின்பற்றாததற்காக... ஏ.ஐ.சி.டி.இ.-க்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

புதுடெல்லி: தனது உத்தரவை பின்பற்றாத அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.). பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இந்த அமைப்புதான் ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கி வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக நிலுவையில் இருந்த ஒரு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.சி.கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உத்தரபிரதேசத்தை சேர்ந்த டாக்டர் அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர், ''பொறியியல் கல்லூரிகளுக்கு வருடாந்திர அங்கீகாரம் அளிக்க உச்ச நீதிமன்றம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியிட்ட கால அட்டவணையை ஏ.ஐ.சி.டி.இ. பின்பற்றவில்லை. உத்தரபிரதேசத்தில், 612 பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை" என்று குற்றம் சாட்டினார்.

அதைக் கேட்டு கடும் கோபம் அடைந்த நீதிபதிகள், ஏ.ஐ.சி.டி.இ. வழக்கறிஞரை பார்த்து, ''சட்டத்தைப் பொறுத்தவரை, நாங்கள் பிறப்பிப்பதுதான் இறுதி உத்தரவு. எங்கள் உத்தரவை அலங்கோலம் ஆக்காதீர்கள். நாங்கள் ஒன்றும் இங்கு சும்மா உட்கார்ந்து இருக்கவில்லை.

உங்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியும். அபராதம் விதிக்க முடியும். இதை சம்பந்தப்பட்ட எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் உத்தரவை எப்படி அமல்படுத்த வைப்பது என்று எங்களுக்கு தெரியும். எங்கள் உத்தரவை பின்பற்றாததற்காக, எங்களால் ஈவு, இரக்கமற்ற அணுகுமுறையை காட்ட முடியும்.

612 என்ஜினீயரிங் கல்லூரிகளின் மாணவர்கள் உங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான காலக்கெடு, ஜூன் 10-ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது. இது ஒருதடவை மட்டுமே அளிக்கப்படும் சலுகை. இதை முன்மாதிரியாக ஆக்கிவிடக்கூடாது. மேலும், எங்கள் உத்தரவை பின்பற்றாதது குறித்து ஒரு வாரத்துக்குள் நியாயமான பதிலை அளிக்க வேண்டும்" என்று கூறினார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close