Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நம் தேசத்தை எந்த தீயசக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது! -தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நம்பிக்கை

புனே: நம் தேசத்தை எந்த தீயசக்திகளாலும் ஒன்றும் செய்திட முடியாது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அதித் தோவால் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

புணேவில் உள்ள தகவல்தொழில்நுட்பப் பூங்காவில், 'வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு' என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, ''நமது நாட்டில் மொழி, கலாசாரம் என பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதில்தான் ஒன்றுபடுகிறோம். வேற்றுமையில் ஒற்றுமையைக் கடைப்பிடிக்கும் நமது தேசத்தை எந்த தீயசக்திகளாலும் ஒன்றும் செய்துவிட முடியாது.

நாட்டுக்காக எந்த தியாகத்தையும் செய்யாதவர்கள்தான், நாடு சிதறுண்டுவிடும் என்று பேசி வருகின்றனர். ஆனால், இதுபோன்ற சம்பவங்களுக்கு நாட்டில் வசிக்கும் பிற மக்கள் எந்த வகையில் பதில் கொடுக்கிறார்கள் என்பது மிகமுக்கியம். நமது தேசத்துக்கென்று தனிப்பட்ட சக்தி உண்டு. அதன் மூலம் இதுபோன்ற சவால்கள் முறியடிக்கப்படும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ