Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரிமினல் வழக்குகள் மீது விரைந்து விசாரணை நடத்துங்கள்! -காவல்துறைக்கு நிதிஷ் அதிரடி உத்தரவு

பாட்னா: எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து, கிரிமினல் வழக்குகள் மீது விரைந்து விசாரணை நடத்துங்கள் என்று காவல்துறைக்கு நிதிஷ் குமார் அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.

பீகாரில் தொடர்ந்து கிரிமினல் குற்றச்செயல்கள் நடைபெறுவதாகவும், மீண்டும் காட்டாட்சி தலை தூக்கி உள்ளதாகவும் பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பரபரப்புக் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றன. அதற்கேற்ப, பத்திரிக்கையாளர் கொலை, ராஷ்ட்ரிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ மீது புகார் உள்ளிட்ட பல சிக்கல்கள் பீகார் அரசுக்கு அடுத்தடுத்து வந்தது. பணத்திற்காக மிரட்டல் வருவதாக மருத்துவர்கள் சிலரும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை மற்றும் உள்துறை அதிகாரிகளிடம், ''கிரிமினல் வழக்குகள் உள்ளிட்டவை மீது விரைந்து விசாரணை நடத்த வேண்டும். எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு விசாரணையை துரிதப் படுத்த வேண்டும். மேலும், இது தொடர்பாக சட்டத்தில் ஏதேனும் திருத்தம் தேவையென்றால், அதற்கு பரிந்துரை செய்யலாம்" என்றும் நிதிஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ