Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரத்தமாற்று சிகிச்சையில் அலட்சியம்: இந்தியாவை மிரட்டும் ஹெச்.ஐ.வி!லக ரத்ததான தினம் நெருங்கிக் கொண்டு இருக்கும் நிலையில், ஒரு செய்தி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 17 மாதங்களில் மட்டும், இந்தியா முழுவதும் 2,234 நபர்கள் HIVயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்படி நிகழ்வதற்குக் காரணம், ரத்தமாற்று சிகிச்சையின்போது கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததுதான் எனத் தெரியவந்துள்ளது.  கடந்த வாரம் கூட அஸ்ஸாமில், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் ரத்தத்தில் HIV நோய் பாதிப்பு தெரிந்தது.

இந்நிலையில், HIV பாதிக்கப்பட்டவர்களை உடைய மாநிலங்களைக் கணக்கெடுக்கையில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்திலும், குஜராத் இரண்டாம் இடத்திலும், மஹாராஷ்ட்ரா மூன்றாம் இடத்திலும், தலைநகரான டெல்லி நான்காம்  இடத்திலும் உள்ளது தெரிய வந்துள்ளது. பாதுகாப்பான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளாததாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் இடமில்லை என்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்களை அரசு தற்போது நடத்துவதில்லை. ஆனால்  இப்படி மருத்துவமனைகளில் தவறுகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. 

 

இந்தியாவைப் பொறுத்தவரை NACO (National AIDS Control Organisation) தான் ரத்ததானம் மற்றும் சுகாதார விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய அமைப்பு. ஒரு  ரிப்போர்ட்டின்படி, NACO தானமாக பெற்ற மொத்த ரத்தம் 30 லட்சம் யூனிட்கள். இதில் 84% தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பெறப்பட்டவை. இங்கு இருந்துதான் பிரச்னை ஆரம்பமாகி இருக்க வேண்டும். காரணம், NACO யாருடைய ரத்தமாக இருப்பினும் AIDS, மலேரியா,  hepatitis B போன்ற பல நோய்களுக்கான பரிசோதனையைச் செய்த பிறகே அதை பெற்றுக்கொள்ளும்.

NACO வின் துணை இயக்குனர் கோயல் இதுகுறித்து கூறுகையில், " இந்த பிரச்னைக்கு வழி கண்டுபிடிக்கத் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறோம். 20 வருடங்களுக்கு முன்பு, ஏறத்தாழ 10% HIV virus ரத்தம் மூலமே பரவியது. ஆனால், இன்று அது 1 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து ரத்த வங்கிகளிலும் ரத்தத்தைப் பரிசோதிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையும்தாண்டி, HIV வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்ட ஒருவரின் ரத்தத்தில் அதைக் கண்டுபிடிக்க முடியாது. HIV -ve ஆகத்தான் ரிஸல்ட் வரும்". என்றார்.

2015 ல் வெளியிட்ட ஆய்வு முடிவின்படி, இந்தியாவில் 2011ல் 20.9 லட்சம் பேர் HIV நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இதில் 86% பேர் 15-49 வயதுக்கு உட்பட்டவர்கள்; 7% பேர் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்; 39% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனைகளிலும் ரத்த வங்கிகளிலும் ஒரு நொடி அதிகமாக செலவழித்து பரிசோதித்துப் பார்த்தால் பல உயிர்கள் காக்கப்படும். மேலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்த விஷயத்தில் அதிகளவு அக்கறை காண்பித்தால், போலியோவை ஒழித்ததுபோல AIDSஐயும் நம்மால் ஒழிக்க முடியும்!

- ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close