Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சத்யா நடெல்லாவை கவர்ந்த 8 வயது சிறுவனின் அறிவுக்கூர்மை!

 

மெடான்ஸ் மெஹ்தா (Medansh Mehta). மும்பையைச் சேர்ந்த இந்த 8 வயதுச் சிறுவன்,  Microsoft நிறுவனத்தின் CEO வை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளான்.இந்தியாவில் நடந்த மாணவ டெவலப்பர்கள் சந்திப்பில், CEO சத்யா நடெல்லாவைச் சந்தித்த மெஹ்தா, தான் டெவலப் செய்த விளையாட்டு ஆப், 'Let there be light' ஐ காண்பித்துள்ளார்.

Game app ஐத் தவிர மெஹ்தாவிற்கு, நம் நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் சார்ந்த பல விஷயங்கள் தெரிந்துள்ளது.

" நாம் நிறைய தொழிற்சாலைகள் மற்றும் வயல்வெளிகளை உருவாக்கி நம் நாட்டை வளப்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட அளவில் நாம் மிகவும் வளமாகி விடுவோம்.

நம் நாடு மாசுபடுவதைத் தடுப்பதற்கு, தொழிற்சாலைகளுக்கு இணையாக வயல்வெளிகளும் காடுகளும் வேண்டும்" என மெஹ்தா கூறியதைக் கேட்டு சத்யா ஆச்சர்யப்பட்டு விட்டார்.

"நான் இன்று ஒரு 8 வயது சிறுவனைப் பார்த்தேன். இச்சிறுவனுக்கு, நம் பொருளாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் எப்படி சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என நன்கு தெரிந்து இருக்கிறது. இதுதான் இவனுடைய லட்சியம். இதை இவன் ஒரு நாவல் கேமாக மாற்றி விட்டான்!" எனப்புகழ்ந்துள்ளார் சத்யா.

இப்படிப்பட்ட சமூக அக்கறையுள்ள இளைஞர்கள்தான் நம் நாட்டிற்கு மிகவும் தேவை.

- ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close