Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுவையில் 6ம் தேதி நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு: தொண்டர்கள் போராட்டம்!

 

ரு வழியாக புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி பதவியேற்பு விழாவிற்கான தேதி குறிக்கப்பட்டுவிட்டது. தேர்தலில் வெற்றி பெறுவதற்குக் கூட காங்கிரஸ் இவ்வளவு பிரச்னைகளை சந்தித்திருக்காது. ஆனால், வெற்றி பெற்று அமைச்சரவையை முடிவு செய்தவதற்குள் துவண்டுதான் போய்விட்டனர் அதன் தலைவர்கள்.

புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க கூட்டனி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனாலும், முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவியதால் அனைத்து முன்னணித் தலைவர்களும் டெல்லிக்கும், புதுச்சேரிக்கும் மாறி மாறி பறந்தார்கள். பதவியேற்பு தள்ளிப்போனதால், எதிர்கட்சிகளும், ஊடகங்களும் காங்கிரஸ் கட்சியை வறுத்தெடுக்க ஆரம்பித்தன.

இந்நிலையில், கடந்த 28-ம் தேதி புதுச்சேரிக்கு வந்த காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் முகுல் வாஸ்னிக்கும், ஷீலா தீட்ஷித்தும் எம்.எம்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி நாராயணசாமியை முதலமைச்சராக அறிவித்துவிட்டு, அப்பாடா என்று அமருவதற்குள், அமைச்சர் பதவிகள் யாருக்கு என்ற அடுத்த சிக்கல் எழுந்தது. இதற்கிடையில் நாராயணசாமியை முதல்வராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் கடும் போராட்டத்தில் குதிக்க ரணகளமானது புதுச்சேரி.

இந்நிலையில், அமைச்சர் பதவிகளுக்கும் கடும் போட்டி நிலவியதால் மீண்டும் அனைவரும் டெல்லி நோக்கி படையெடுத்தனர். அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டதைவிட சபாநாயகர் பதவி வேண்டாம் என்று சொன்னவர்களே அதிகம். சபாநாயகர் பதவியில் இருந்தால் அடுத்த தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற நம்பிக்கையால் அந்தப் பதவியை ஒதுக்க ஆரம்பித்தனர் அனைவரும். அதற்காக முதல் ஆளாய் டெல்லிக்கு பறந்தது முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம். இந்தப் பிரச்னையினால் பதவியேற்பு மேலும் ஒரு வாரம் தள்ளிப் போனது. இதற்கிடையில் அமைச்சர் பட்டியலை இறுதி செய்வதற்காக முதலமைச்சர் நாராயணசாமியும், காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயமும் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், ராகுலையும் சந்தித்தனர்.

இந்நிலையில், நேற்று (3-ம் தேதி) டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் வைத்திலிங்கத்தை சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, இன்று (4-ம் தேதி) காலை நமச்சிவாயம், கமலக்கண்ணன், கந்தசாமி, ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ் போன்றவர்களும் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர். அதோடு, முதலமைச்சர் நாராயணசாமி உட்பட புதிய அமைச்சர்கள் அனைவரும் வரும் 6-ம் தேதி திங்கட்கிழமை நன்பகல் 12.10 மணியளவில் கடற்கரை காந்தித் திடலில் பொதுமக்கள் முன்னிலையில் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டதோடு, உடனே கடற்கரை சாலையில் அதற்கான பணிகளும் துவங்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் வைத்திலிங்கத்திற்கு அமைச்சர் பதவி அளிக்காததைக் என்பதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் மடுகரை மற்றும் கரியமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் குதித்தனர். மேலும், நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட்டதோடு வைத்திலிங்கத்தின் வீட்டையும் முற்றுகயிட்டு, அமைச்சர் பதவி தரவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள் என்று கோஷம் எழுப்பினர்.

அதேபோல, முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை என்பதை கண்டித்த அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட பரபரப்பு தொற்றிக் கொண்டது புதுச்சேரியில்.

கோஷங்களும், கோஷ்டிப் பூசல்களும் இல்லாதது காங்கிரஸ் கட்சியாக இருக்க முடியுமா என்ன?

-ஜெ.முருகன்

படங்கள்: அ.குருஸ்தனம்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close