Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்னது 2 அரசு பங்களாக்களை ஆக்கிரமித்துள்ளேனா? பா.ஜ.க. புகாரை மறுக்கும் நிதிஷ் குமார்!

பாட்னா: நான் 2 அரசு பங்களாக்களை ஆக்கிரமித்துள்ளேனா?, ஒரே நேரத்தில் ஒருவர் 2 வீடுகளில் எப்படி வசிக்க முடியும்? என்று பா.ஜ.க. புகாரை மறுத்துள்ளார் நிதிஷ் குமார்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பாட்னாவில் 2 அரசு பங்களாக்களை ஆக்கிரமித்து உள்ளதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுசில் குமார் மோடி சமீபத்தில் குற்றஞ்சாட்டி இருந்தார். இதை நிதிஷ் குமார் நேற்று மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ''நான் 2 அரசு பங்களாக்களை ஆக்கிரமிக்கவில்லை. விதிமுறைப்படி, முன்னாள் முதல்வர் என்ற முறையில், ஆயுட்கால பயன்பாட்டுக்காக ஒரு அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. முதல்வர் என்ற முறையில் மற்றொரு அரசு பங்களா எனக்கு ஒதுக்கப்பட்டது. அதிலிருந்துதான் தற்போது நான் பணியாற்றி வருகிறேன்.

ஒரே நேரத்தில் ஒருவர் 2 வீடுகளில் எப்படி வசிக்க முடியும்? நான் எந்த இடத்தில் இருந்தும் பணிபுரிய தயாராக இருக்கிறேன். பா.ஜ.க. அலுவலகத்தில் ஒரு அறை கொடுத்தால், அங்குகூட என்னால் வசிக்க முடியும்" என்றார் ஆவேசமாக.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ