Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதை செய்வதற்கு பதில் இதை செய்யுங்கள்! -அப்படி என்ன அட்வைஸ் சொல்கிறார் நாயுடு

விஜயவாடா: மது குடிப்பதற்கு பதில் அந்த பணத்தில் மரக்கன்று வாங்கி நடலாம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அட்வைஸ் வழங்கி உள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, விஜயவாடா மாவட்டம் கொல்லப்பூடி என்ற ஊரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்று நட்டார். அதன்பின் அவர் அந்த விழாவில் பேசும்போது, ''சமீபகாலமாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்.

அவர் பேசும் வார்த்தைகள் சபை நாகரீகம் இல்லாமல் உள்ளன. அவரது பேச்சுக்காக தெலுங்குதேசம் கட்சியினர் உணர்ச்சி வசப்படாமல் அமைதி காக்க வேண்டும். அநாகரீகமாக நடந்து கொள்ளும் ஜெகன்மோகன் ரெட்டியை மக்கள் அரசியலில் இருந்து தூக்கி வீச வேண்டும்.

மேலும், மேலை நாடுகளில், ஒரு நாளைக்கு ஒரு ‘பெக்’ அளவுக்குத்தான் மது குடிப்பார்கள். அவர்கள் ஒருபோதும் அளவுக்கு அதிகமாக மது குடிப்பதில்லை. ஆனால், நம் நாட்டில் ஒரு தடவை மது பாட்டிலை எடுத்தால், முழு பாட்டிலையும் குடித்து காலி செய்து விடுகிறார்கள்.

பிறகு மது போதையில் வீட்டில் உள்ள மனைவியை அடித்து துன்புறுத்துகிறார்கள். மது அருந்திவிட்டு பெண்களை கை நீட்டி அடிப்பது என்பது மிகவும் மோசமான பழக்கம். அதில் என்ன வீரம் இருக்கிறது? அதனால், ஆண்கள் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தும் அநாகரீகத்தை கைவிட வேண்டும்.

இப்படி மது குடிப்பதற்கு பதில் அந்த பணத்தில் மரக்கன்று வாங்கி நடலாம். அது மிகப்பெரும் புண்ணியத்தை உங்களுக்கு தேடி தரும். சிலர் ஓய்வு நேரத்தில் பொழுது போக்குவதற்கு சீட்டு விளையாடுகிறார்கள். இல்லையெனில் மது குடிக்க போய் விடுகிறார்கள். இப்படியெல்லாம் பணத்தை வீணடிக்கக் கூடாது" என்று அட்வைஸ் மழை பொழிந்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ