Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைச்சர் தந்த அரசியல் நெருக்கடி: பெண் டி.எஸ்.பி. ராஜினாமா!

பெங்களூரு: தொடரும் அரசியல் மற்றும் மேல் அதிகாரிகளின் நெருக்கடிகளால் பெண் டி.எஸ்.பி. ஒருவர் ராஜினாமா செய்துள்ளது கர்நாடகா அரசியலில் பெரும் விவகாரமாக மாறியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில்,கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டத்திலுள்ள காத்லிகி என்னும் ஊரில், துணை காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தவர் அனுபமா ஷெனாய். இவர் கர்நாடகாவின் தொழில் துறை அமைச்சர் பி டி பரமேஷ்வர் நாயக் என்பவரின் போன் அழைப்பிற்கு பதில் அளிக்கவில்லை என்பதால் கடந்த ஜனவரி மாதம் ஒரே நாளில் இரண்டுமுறை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவர் இன்று(திங்கள்) தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close