Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருப்பு பணத்தை என்னிடம் கொடுத்தால்... -என்ன சொல்கிறார் இந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.

ஆல்வார்: பசுக்களைக் காக்கும் நல்ல நோக்கத்துக்காக கருப்புப் பணத்தை நான் ஏற்றுக் கொள்வேன் என்று கூறிய ராஜஸ்தான் எம்.எல்.ஏ. தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தின் ராம்கார்க் தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கயந்தேவ் அகுஜா. இவர், சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து அவ்வப்போது சிக்கலில் மாட்டிக்கொள்வது வழக்கம்.

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் மாணவர் போரட்டம் நடந்து கொண்டிருந்தபோது, பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அகுஜா, அந்த பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆணுறைகளும், கருக்கலைப்பு ஊசிகளும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்த விவகாரம் பெரிதானதால், பா.ஜ.க. தலைமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்தநிலையில், கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதை என்னிடம் கொடுத்தால் பசுக்களைக் காப்பாற்றும் நல்லெண்ணத்துக்காக அதை நான் பயன்படுத்துவேன். மேலும், ஏழைப் பெண்களின் திருமணம் உள்ளிட்ட நல்ல காரியங்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்துவேன். அதேபோல, என்னிடம் கருப்புப் பணத்தை கொடுப்பவர்களுக்கு, பணத்தை பெற்றதற்கான ஒப்புகைச் சீட்டையும் நான் கொடுப்பேன்" என்று கூறி உள்ளார்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ. கயந்தேவ் அகுஜாவின் இந்த பேச்சுக்கள், தற்போது அவருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்