Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீரப்பனை சுட்டுக்கொன்றது எப்படி? 1000 பக்கங்களில் புத்தகம் எழுதும் விஜயகுமார்!

புதுடெல்லி: தமிழகம்,கேரளா மற்றும்  கர்நாடக மாநில அரசுகளுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சவாலாக விளங்கிய சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனை அதிரடிப்படை எப்படி சுட்டுக் கொன்றது என்று விளக்கும் வகையில் புதிய புத்தகம் ஒன்றை எழுதவுள்ளதாக முன்னாள் அதிரடிப்படை தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் 20 ஆண்டுகளுக்கும்  மேலாக கடத்தல் சாம்ராஜ்யம்  நடத்திய  வீரப்பனை அதிரடிப்படை கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி காட்டுக்குள் சுட்டுக் கொன்றது.

இந்த அதிரடி நடவடிக்கை காவல் அதிகாரி விஜயகுமார் தலைமையில் நடந்தது. இவர் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின்  மூத்த பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வருகிறார். இவர் வீரப்பனை சுட்டுக் கொன்றது பற்றி, சுமார் 1000 பக்கங்கள் வரையுள்ள புத்தகத்தை  சுவாரஸ்ய அதிரடி திகில் சம்பவங்களோடு  எழுதிவருகிறார். 


இது பற்றி விஜயகுமார் கூறுகையில், ‘‘வீரப்பன் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதைச்  சரியாகவும்  முறையாகவும் கூறுவதே எனது நோக்கம். 10 மாதம் திட்டமிடப்பட்டு அந்த  ஆப்ரேஷனை வெற்றி கரமாக நடத்தினோம்.  அதிரடிப்படையின் ஒவ்வொரு  நிகழ்வுகளும் காலவரிசைப்படி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும். இது உண்மையான கதையாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ