Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லியை தகர்க்க தாவூத் சதி திட்டம்..! எச்சரிக்கும் உளவுத்துறை



பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் கைக்கூலியாக செயல்பட்டு டெல்லியை தகர்க்க தாவூத் இப்ராஹிம் சதித்திட்டம் தீட்டி வருவதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி, அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார். அவரை கைது செய்வதற்கு ‘ரெட் கார்னர்’  நோட்டீசும் விடுக்கப்பட்டது.

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள தாவூத் இப்ராஹிம், இருப்பிடம் குறித்த பல்வேறு முக்கிய ஆவணங்களை பாகிஸ்தான் அரசிடம் இந்தியா அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு அரசு அழுத்தத்தை கொடுத்து வருகிறது. ஆனால், தாவூத் இப்ராஹிம் எங்கள் நாட்டில் இல்லை என்று  பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில், தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் கைக்கூலியாக செயல்பட்டு டெல்லியை தகர்க்க திட்டமிட்டு வருவதாக இந்திய உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. தொழில் நுட்ப நுண்ணறிவு மற்றும் மனித புலனாய்வு  மே 30ம் தேதி  கிடைத்த தகவலின் அடிப்படையில் புனேயை சேர்ந்த சட்ட விரோத ஆயுத வியாபாரியும், தாவூத்தின் உதவியாளருமான ஒருவர் இந்த சதித் திட்டத்திற்கு திட்டமிடுவதாக தெரியவந்து உள்ளது.

டெல்லியில் ரயில் நிலையம், மெட்ரோ நிலையங்கள்,  சர்வதேச விமான நிலையம் மற்றும் மாநில சட்டமன்ற கட்டடம் ஆகியவை அவர்களின் முக்கிய இலக்குகளாக இருக்கும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் தாவூத் இப்ராஹிம் விரைவில் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரப்படுவார் என்று மத்திய உள்துறை ராஜ்நாத் சிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close