Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரத்த தானம் செய்யுங்கள்! உயிரை காப்பாற்றுங்கள்!

ரத்ததானம் குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே பரவலாக அதிகரித்து வருகிறபோதிலும், சிலருக்கு இன்னும் அதுகுறித்த தயக்கங்கள் இருக்கதான் செய்கின்றன. இந்நிலையில் ரத்த தானம் பெற்று உயிர் பிழைத்தவர்கள் மற்றும் ரத்த தானம் அளித்த சிலரது நெகிழ்ச்சியான அனுபவங்கள் இங்கே....

 

நடுத்தர வயது வங்கி அலுவலர்

 

"நான் ஒரு பேங்க்ல கேஷியரா ஒர்க் பண்றேன். தினமும் ஆபிஸ் வருவேன், வீட்டுக்குப் போவேன். இதுதான் என் டெய்லி ரொட்டீன். என் வேலை உண்டு நான் உண்டுன்னு இருப்பேன். ஹாஸ்பிடல்ஸ்னாலே எனக்கு அலர்ஜி. ஒரு நாள் வேலை முடிச்சு வீட்டுக்கு புறப்படும்போது தடுமாறி விழுந்துட்டேன். எழுந்து நிற்கவே சக்தியில்லாம இருந்தேன். ஆபீஸ் ஸ்டாஃப்ஸ் ஹாஸ்பிடல்ல சேர்த்தாங்க. எனக்கு அனிமிக்கா (ரத்தசோகை) இருக்கிறதாகவும், நான்கு பாட்டில் ரத்தம் ஏத்தணும்னும் சொன்னாங்க. அப்போ என் கூட வேலை செய்யுற நண்பர்கள்தான் ரத்தம் கொடுத்தார்கள். அவங்க ஒரு குழுவா இணைஞ்சு ஆறு மாசத்துக்கு ஒருமுறை ரத்தம் கொடுக்கிற விஷயத்தையும் சொன்னாங்க. நான் உடல் தெம்பானதும் இப்போ நானும் அவங்களோட சேர்ந்து ரத்தம் கொடுக்கறேன்.முன்னே இருந்த ஆரோக்கியம் இப்போ பலமடங்கு கூடினதா உணர்றேன்.

​​
இரண்டு குழந்தைகளின் தாய்

 

இரண்டு அல்லது இரண்டரை மாதங்களுக்கு பிறகு நடந்திருக்க வேண்டிய நிகழ்வு இது. ஆம் இரண்டு வருடங்களுக்கு முன்பு, மே மாதம் ஏழாம் தேதி எப்போதும் போல, என் மூத்த மகனை பள்ளியில் இறக்கிவிட்டு அலுவலகம் செல்ல எத்தனித்தபோதுதான் அடிவயிற்றில் ஒரு அதீத வலியினை உணர்ந்தேன். மருத்துவர்கள் டெலிவரிக்குக் கொடுத்த தேதி, வெகு தொலைவில் இருந்தது. கணவரை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறிவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தேன். அவர்கள் சற்றும் தாமதிக்காமல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறிவிட்டனர். கிட்டத்தட்ட என் கணவருக்குப் பிரியாவிடை கொடுத்துவிட்டு அறுவை சிகிச்சை கூடத்திற்குள் சென்றேன். அவ்வளவு குருதி இழப்புக்குப் பின் ஒருவர் உயிரோடு மீண்டு வரமுடியும் என்பதை என்னால் இன்றும் நம்ப முடியவில்லை. அன்று எனக்கு, என்னுடைய அரிய வகை ரத்தத்தை கொடுத்து என்னை காப்பாற்றிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி. அன்று அவர்கள் உதவி செய்திருக்காவிட்டால் இன்று என் குடும்பம் ஒரு மகள், தங்கை, மனைவி மற்றும் தாயை இழந்திருக்கும். ரத்தம் கொடுக்கும் ஒவ்வொருவரும் இன்று நான் வணங்கும் தெய்வங்களே!

6 வயது சிறுமி

 

அன்று பூத்த மலர் போல அழகாய் இருந்த அந்தச் சிறு பெண், மாலைத் தென்றலில் பூங்காவின் சறுக்கு மரத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள், என்னைக் கண்டதும் என்னருகே ஓடிவந்து முத்தமிட்டு 'தாங்க்ஸ் அங்கிள்' என்றாள். ஆச்சரியத்துடன் அந்தப் பெண்ணை நோக்கி 'யாரும்மா நீ?" என்றேன். அவளோ பதிலுக்கு, 'என் பேர் ரியா அங்கிள். என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனா உங்களை எனக்கு நல்லாத் தெரியும். போன மாசம் இதோ இந்த ரோட்டை க்ராஸ் செஞ்சப்போ ஒரு கார் வேகமா வந்து என் மேல இடிச்சிடுச்சு . அப்பா, அம்மா எல்லாம் ஹாஸ்பிட்டல் தூக்கிட்டுப் போனாங்க. எனக்கு ரொம்ப பயமா இருந்தது. அப்புறம் நான் தூங்கிட்டேன். நான் எழுந்தப்போ அம்மா, அவங்க செல்போன்ல உங்க போட்டோவ காட்டி நீங்கதான் எனக்கு ரத்தம் கொடுத்து என்னை காப்பாத்துனதா  சொன்னாங்க, தாங்க்யூ அங்கிள்.' என்று கூறிவிட்டு மீண்டும் ஓடிச்சென்று விளையாட ஆரம்பித்தாள். வாழ்வில் ஏதோ சாதனை செய்தது போன்ற உணர்வுடன் வீடு திரும்பினேன்.

​​கல்லூரி இளைஞர்

 

"அப்பா சொன்னா கேக்க மாட்டேன், அம்மா சொன்னா கேக்க மாட்டேன். அட்வைஸ் ன்னு யாராவது பண்ணினா அரை கிலோ மீட்டர் ஓடுவேன். இப்படித்தான் இருந்தேன் நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும். ஆனா இப்போ அப்படியே உல்டா. காரணம் முகம் தெரியாத ஒருத்தர். நம்ப முடியலையா, எனக்கும் தாங்க. நண்பனோட பர்த்டே பார்ட்டில கலந்துகிட்டு பைக்ல வந்துட்டு இருந்தேன், அப்போ ஒரு கால் வந்ததுன்னு பேசறதுக்காக வண்டிய ஓரமா நிறுத்தினேன். அப்போ ஒரு திருடன் என் கழுத்துல இருந்த செயினை அறுக்கிறதுக்காக கத்தியை வீசினான். ஒரு நிமிஷம் என்ன நடக்குதுன்னே தெரியல. நான் அப்படியே மயங்கி விழுந்துட்டேன். அங்கிருந்தவங்க ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாங்க, என்னுடையது ரேர் ப்ளட் க்ரூப் ங்கிறதால அப்பாவும் அம்மாவும் அன்னைக்கு அலைஞ்சத பார்த்தபோது இன்னைக்கும் கஷ்டமா இருக்கு. அப்போதான் யார்னே தெரியாது, அவர் வந்து தன்னுடைய ரத்தத்தைக் கொடுத்துட்டு போனார். இப்போ நான் இதை எழுதிகிட்டு இருக்கேன்னா அதுக்கு அவர்தான் காரணம். அன்னையிலிருந்து ஒவ்வொரு ஆறு மாசத்துக்கு ஒரு தடவ நானும் ரத்தம் கொடுக்கறேன். என் ரத்தம் வேற ஒருத்தரோட உயிரை காப்பாத்தும் இல்லையா?"

- ஆனந்த் விஜயராகவன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close