Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரகுராம் ராஜனின் டைம்பாம் டிசம்பரில் வெடிக்கும்..! சுப்பிரமணியன் சுவாமி பகீர்


ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இந்திய நிதி அமைப்பில் 'டைம் பாம்' வைத்துள்ளார். இது டிசம்பரில் வெடிக்கும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீது புகார் தெரிவித்து பா.ஜனதா  மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, கடந்த மாதம் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘ரகுராம் ராஜன் மனதளவில் முழுமையாக இந்தியர் அல்ல. அவர் இந்திய பொருளாதாரத்தை சீரழிக்க தவறான வழிகளில் செயல்படுகிறார். அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

மேலும், ரகுராம் ராஜனின் குடியுரிமை பற்றியும் சர்ச்சையை எழுப்பிய சுப்பிரமணியன் சுவாமி, "அமெரிக்காவின் கிரீன் கார்டு வைத்துள்ள ரகுராம் ராஜன் மனதளவில் முழுமையான இந்தியர் அல்ல. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று கூறினார். இந்த சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “ரகுராம் ராஜன் இந்திய குடிமகன்தான். அவர் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ரகுராம் ராஜன் இந்திய நிதி அமைப்பில் 'டைம் பாம்' வைத்துள்ளார், அது வரும் டிசம்பர் மாதம் வெடிக்கும் என்று சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ