Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எங்கள் அரசை செயல்படவிடாமல் மோடி தடுக்கிறார்!'- அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி அரசை செயல்படவிடாமல் பிரதமர் மோடி தடுக்கிறார் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி உள்ளார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்றது முதல் டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து அதிகாரப் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் அல்கா லம்பா, ஜர்னைல் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 21 பேர், சட்டப்பேரவைச் செயலர்களாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, இந்த 21 எம்.எல்.ஏ.க்களும் இரட்டைப் பதவி வகிப்பதாகவும், அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரியும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதையடுத்து, 21 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. எழுத்துப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு பதிலளித்த எம்.எல்.ஏ.க்கள், தங்களை நேரில் அழைத்து விளக்கம் பெற வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இதனிடையே, 21 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து பாதுகாக்கும் வகையில், டெல்லி பேரவை உறுப்பினர்கள் சட்டம்-1997-ல் திருத்தம் மேற்கொள்ளும் மசோதாவை, ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றியது. மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட இம்மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இந்த விவகாரத்தில்,  டெல்லி அரசு நிறைவேற்றிய சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறுத்துவிட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார். அதில், 'பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்படுகிறது. யாரும் செயல்படக்கூடாது, அல்லது வேறு யாரையும் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்ற கொள்கையை பிரதமர் பின்பற்றுகிறார்

மேலும், டெல்லியில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியை பிரதமரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. டெல்லி அரசை செயல்படவிடாமல் பிரதமர் மோடி தடுக்கிறார். ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் நாடாளுமன்ற செயலர்கள் இருக்கும்போது, டெல்லியில் மட்டும் நாடாளுமன்ற செயலர்களை தகுதி நீக்கம் செய்தது ஏன்?" என்று  அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ