Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மின்னல் வேகத்தில் சென்ற கார்..! தூக்கி வீசப்பட்ட வாலிபர் (பதற வைக்கும் வீடியோ)

 

டெல்லியில் உள்ள ஜனாக்புரி பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் மீது மின்னல் வேகத்தில் கார் மோதும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

மேற்கு டெல்லியின் ஜானக்புரி பகுதியை சேர்ந்த ரிஷாப் (வயது 21) என்ற இளைஞர் நேற்று அதிகாலை இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு தனது தந்தையின் ஹோண்டா சிட்டி காரில் வீட்டிற்கு திரும்பினார். அளவுக்கதிமாக மதுபோதையில் இருந்த ரிஷாப் காரை மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்தில் ஓட்டி வந்துள்ளார். அப்போது திடீரென தாறுமாறாக கார் சென்றதில் சாலையில்  நடைபயிற்சிக்காக வந்த கமெஷ்வர் பிரசாத் என்ற அரசு ஊழியர் மீது கார் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்ட பிரசாத் பலியானார்.

அப்போதும் காரை நிறுத்தாமல் தொடர்ந்து சென்ற ரிஷாப், சந்தோஷ்(40) என்ற மற்றொருவர் மீது மோதினார்.  அவர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தார். இரு விபத்தை ஏற்படுத்திய பிறகும் காரை நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாக தவறான பாதையில் காரை ரிஷாப் ஓட்டிச்சென்றார். கார் தாறுமாறாக வருவதை கவனித்த அஷ்வானி ஆனந்த் என்ற 67 வயது முதியவர் ஓட முயற்சித்தார். ஆனாலும், கார் அவர் மீதும் பயங்கரமாக மோதியது. இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.



 

காவல்துறையின் காரை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் கார் நிற்காமல் தொடர்ந்து வேகமாக சென்றதையடுத்து காரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். அப்போது, ரிஷாப்  போதையில் இருந்தது தெரியவந்தது. காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து ரிஷாப்பை சிறையில் அடைத்தனர். 

டெல்லி தொழிலதிபரின் மகனான ரிஷாப், டெல்லியில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வருகிறார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ