Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

251 ரூபாய் ஸ்மார்ட் போன்கள்..! டெலிவரி தேதி அறிவிப்பு

ரூ.251 விலையுள்ள Freedom 251 ஸ்மார்ட் போன்கள் ஜூன் 28ம் தேதி முதல் டெலிவரி செய்யப்படுவதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் விலை குறைந்த ஆன்ட்ராய்டு செல்போனை,  நொய்டாவை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் விற்பனை செய்ய உள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதனை தொடர்ந்து, ரூ.251-க்கு ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறி புக்கிங் செய்தது.

ஆன்ட்ராய்டு 5.1 இயங்குதளம் கொண்ட Freedom 251 செல்போன் 4-இன்ச் qHD IPS display மற்றும் 3.2MP பின்புற கேமரா, 0.3MP முன்புற கேமராவுடன் விற்பனை செய்யப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

Freedom 251 செல்போனின் விளம்பரங்கள் நாடு முழுவதும் பெரிதும் கவனம் பெற்றதுடன், ஒரேநாளில் 30,000 பேர் செல்போனுக்கு பணம் செலுத்தி பதிவு செய்தனர். மொத்தம் 7 கோடி பேர் Freedom 251 செல்போன்களுக்கு பதிவு செய்துள்ளதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. முன்பதிவு நடைபெற்ற நாட்களில் அந்த நிறுவனத்தின் இணையதளம் முடங்கியது.

இதனிடையே, பல்வேறு பிரச்னைகளால் பணம் செலுத்தியோருக்கு பணத்தை Freedom 251 திரும்ப அளித்தது. ரூ.2,400 மதிப்பிலான ஆன்ட்ராய்டு செல்போனை ரூ.251-க்கு வழங்குவதாகக் கூறி முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான, வழக்கு நடைபெற்று வரும் நிலையில், திட்டமிட்டபடி, ஜூன் மாதம் முதல்கட்ட விற்பனை தொடங்கும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவன இயக்குநர் மொயித் கோயல் தெரிவித்துள்ளார்.

வரும் 28ம் தேதி முதல் cash on delivery முறையில் பதிவு செய்தவர்களுக்கு செல்போன்களை வினியோகம் செய்ய உள்ளதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பதிவு செய்துள்ள 7 கோடி பேரில் பதிவு அடிப்படையில் 25 லட்சம் பேர்களுக்கு முதல்கட்டமாக செல்போன்கள் ஷிப்பிங் செய்யப்பட்டு டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close