Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரு நண்பர்கள்... பத்தாயிரம் மரங்கள்... மாற்றுத்திறனாளிகளின் மகத்தான சாதனை!

​ஜியா ஹைக்ஸியா (​Jia Haixia​)​ மற்றும் ​ஜியா வென்கி (​Jia Wenqi​)​...இவர்களை உங்களுக்கு தெரியுமா...? வாய்ப்பில்லை. காரணம், இவர்கள் எந்த விருதுகளையோ, பட்டங்களையோ பெறவில்லை. முகநூலிலோ, வாட்ஸ் அப் குரூப்பிலோ பரபரப்பாக சுற்றுச்சூழலைப் பற்றி பேசவோ எழுதவோ இல்லை. ஆனால் அதற்கும் மேலாக ஒரு செயலைச் செய்து வருகின்றனர்.

சீனாவைச் சேர்ந்த இவர்கள்,  பிறவியிலேயே கண்பார்வையற்றவர்கள்.  இவர்கள் செய்த சாதனை என்ன தெரியுமா....? ஏறத்தாழ 10,000 மரங்களை நட்டுள்ளனர். இந்த காலத்தில் மரம் நடுவது சாதாரணம் என நினைக்கிறீர்களா? ஆனால், இது அசாதாரணமான, ஏன் உன்னதமான விஷயமும் கூட. ஏனெனில், ஹைக்ஸியாவிற்கு இரு கண்களும் தெரியாது. வென்கிக்கு இரு கைகளும் கிடையாது! இது அசாதாரணம்தானே?

ஹைக்ஸியாவின் கண் வென்கி, வென்கியின் கை ஹைக்ஸியா என்று, கடந்த 10 வருடங்களாக ஒருங்கிணைந்து வேலை, இல்லையில்லை, சேவை செய்து வருகின்றனர்.​ ​

ஹைக்ஸியா பிறக்கும் போதே ஒரு கண்ணில் காட்ராக்ட் இருந்தது. 2000 ம் ஆண்டில் ஒரு விபத்தில்,  தன் மற்றொரு கண்ணையும் இவர் இழந்து விட்டார். அதேபோல வென்கி 3 வயதில் ஒரு விபத்தில்,  தன் இரு கைகளையும் இழந்து விட்டார். 2001 ம் ஆண்டு, வேலை ஏதும் கிடைக்காததால், அரசிடம் இருந்து அருகாமையில் இருந்த ஒரு ஆற்றின் ஒரு பகுதியை, அடுத்த தலைமுறை உயிர்வாழ மரங்களை நடப்போவதாகக் கூறி குத்தகைக்கு எடுத்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும், காலை 7 மணி அளவில் இருவரும், ஒரு சுத்தியலையும் இரும்புக் கம்பியையும் எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்புவார்கள்.

வென்கி, ஹைக்ஸியாவை தினமும் வேகமாக ஓடும் ஆற்றைக் கடக்க தூக்கிச் செல்ல வேண்டும். இவர்களுக்கு கன்றுகள் வாங்க பணம் இல்லாததால், மரக் கிளைகளை ஒடிக்கவோ வெட்டவோ வேண்டும். இது மிகவும் கடினம். காரணம், பச்சைக் கிளைகள்தான் பூமியில் நட்டு வைத்தால் வளரும். அதனால், ஹைக்ஸியா தினமும் உயரமான மரங்களில் ஏற வேண்டும். கண்கள் இல்லாததால், வென்கியின் வழிகாட்டுதலில்தான் இவர் மரம் ஏறி பச்சைக் கிளையைக் கண்டுபிடித்து வெட்ட வேண்டும்.
அதற்கு பிறகு, நிலத்தில் குழி வெட்டி அதை நட வேண்டியதும் வென்கியின் வேலைதான். பிறகு, அந்த கிளைகளை நீரூற்றி கன்றுகளாக, மரங்களாக வளர்க்க வேண்டும்!

இது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. பல வருடங்களுக்குப் பின்னர்தான் அந்த 3 ஹெக்டேர் நிலம் முழுவதும், பறவைகளின் இசையை கேட்கத் தொடங்கியது. ஆம், அந்த நிலப்பரப்பு முழுவதும் மரங்கள் வளர்ந்து விட்டன. இவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. இவர்கள் பணியை, கடமையை செய்துகொண்டே இருக்கப்போகிறார்கள்.

"நாங்கள் இத்தனை வருடங்களாக அதிகம் சாதிக்கவில்லை என்றாலும், எங்கள் உழைப்புக்கான பலன் கிடைத்துவிட்டது" என்கின்றனர் தன்னடக்கமாக இருவரும்.

"எங்கள் உழைப்பின் பலன் மிகவும் இனிமையாக உள்ளது. நாங்கள் வெறும் ரொட்டியை மட்டும் உண்டாலும், மிகவும் மகிழ்ச்சியோடும் நிம்மதியாகவும் இருக்கிறோம்!" என்கிறார் வென்கி

'மன​ம் இருந்தால் மார்க்கம் உண்டு'  என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு இவர்கள்!


- ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close