Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி விவகாரம்... மோடியை, ஜெயலலிதா சந்திப்பதால் எந்த பயனும் இல்லை! -சித்தராமையா

பெங்களூரு: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பதால் எந்த பயனும் இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்திற்கு தேவையான 29 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் பிரதமர் மோடியிடம் வழங்கினார்.

அந்த மனுவில், ''தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.

மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நதி நீர் இணைப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்..

இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது''அமைச்சரவை கூட்டத்தை நாளை (இன்று) கூட்டியுள்ளேன். பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டி இருப்பதால் இந்த கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது.

பெங்களூருவில் புதிதாக சேர்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய 10 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. காவிரி குடிநீர் 5-வது ஸ்டேஜ் திட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரம் தற்போது நடுவர் மன்றத்தின் முன் உள்ளது. அதனால், பிரதமரை தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்து, காவிரி விவகாரம் குறித்து பேசி இருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது தொடர்பாக அவர் பிரதமரை சந்திப்பதால் எந்த பயனும் இல்லை" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ