Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்ம்ரிதியை கோபப்படுத்திய 'அந்த' வார்த்தை..! சர்ச்சையில் அமைச்சர்

‘டியர்’ என்ற வார்த்தையால் பீகார் கல்வி அமைச்சர் அசோக் சவுத்ரியும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியும் மோதிக்கொண்டது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள கூட்டணி அரசில், மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவுத்ரி கல்வி அமைச்சராக  உள்ளார். இவர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம், ‘கல்வி கொள்கை என்னவாயிற்று?’ என்பது தொடர்பாக ‘ட்விட்டர்’ சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பினார். அதில் அவர் ‘அன்பார்ந்த’ என்ற அர்த்தம் தொனிக்கும்வகையில் ‘டியர் ஸ்ம்ரிதி இரானிஜி’ என தொடங்கி இருந்தார்.

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து அதே ட்விட்டரில் செய்தி வெளியிட்ட ஸ்ம்ரிதி இரானி, ‘பெண்களை டியர் என அழைத்து தொடங்குவது சரியல்ல’ என சுட்டிக்காட்டி இருந்தார். உடனே அசோக் சவுத்ரி, "எனது நோக்கம் அவமரியாதை செய்வதல்ல. பணி ரீதியிலான இமெயில் என்பதால் அப்படி தொடங்கி இருந்தேன்” என பதில் வெளியிட்டார்.

அதற்கு ஸ்ம்ரிதி இரானி, "அசோக் சவுத்ரி, உங்களுக்கும் சரி, வேறு எந்தவொரு நபருக்கும் சரி எனது தகவல் தொடர்புகள் அதார்னியா (மரியாதைக்குரிய) என்றுதான் தொடங்கும்” என பதில் அளித்திருந்தார்.

‘டியர்’ என்ற வார்த்தையால் பீகார் கல்வி அமைச்சரும், மத்திய பெண் அமைச்சரும் மோதிக்கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஜல்லிக்கட்டு கானா, விரட்டி பிடித்து கபடி, சுட்டிகளின் முழக்கம்... மெரினா போராட்டத்தின் நேற்றிரவு நிகழ்வுகள்
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close