Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வரி செலுத்துவோரின் நண்பர்களாக மாறுங்கள்! -வரித்துறை அதிகாரிகளுக்கு மோடி அட்வைஸ்

புதுடெல்லி: வரி செலுத்துவோரின் நண்பர்களாக நீங்கள் மாறினால், வரிகள் அனைத்தும் தானாகவே உங்களிடம் வந்து சேரும் என்று வரித்துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

நாடு முழுவதும் உள்ள வரித்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ‘ராஜஸ்வா ஜியான் சங்கம்’ எனப்படும் 2 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. மத்திய நேரடி வரிகள் வாரியம், மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் பங்கேற்ற வரித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடியபோது பிரதமர் மோடி, ''இந்தியாவில் வரி செலுத்துவது எப்படி? என யாராவது ‘கூகுள்’ தேடல் பொறியில் தேடினால், சுமார் 7 கோடி முடிவுகள் கிடைக்கும். அதேநேரம் ‘இந்தியாவில் வரிகள் கட்டாமல் தப்புவது எப்படி?’ என தேடினால் சுமார் 12 லட்சம் முடிவுகள் வருகிறது.

ஆனால் இந்திய மக்கள் இயல்பாகவே நேர்மையானவர்கள். உத்வேகம் மிகுந்த மக்களால் நிறைந்ததுதான் இந்தியா. எனவே வரிகளை செலுத்துவதற்கான எளிய வழிகளை அவர்கள் கண்டறிந்து விடுவார்கள். வரி செலுத்துவதில் மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் வரிகளை ஒழுங்காக செலுத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் மிகவும் குறைவுதான்.

ஆனால் பிரச்னை என்னவென்றால், வரி செலுத்தும் அவர்களுடன் எந்த அளவுக்கு நாம் நட்புறவை வைத்திருக்கிறோம் என்பது தான். நீங்கள் அவர்களிடம் நம்பிக்கையை கட்டமைத்தால், அவர்கள் தங்கள் வரியை ஒழுங்காக செலுத்துவார்கள். இதன் மூலம் நீங்களும் உங்கள் இலக்கை அடையலாம்.

வரி செலுத்துவோரின் நண்பர்களாக நீங்கள் மாறினால், வரிகள் அனைத்தும் தானாகவே உங்களிடம் வந்து சேரும். இதற்காக வரி செலுத்துவோர், வரித்துறை அதிகாரிகள் இடையே நம்பிக்கை பாலத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக வரி நிர்வாகத்தை டிஜிட்டல் மயத்தை நோக்கி நகர்த்த வேண்டும்.

வரி செலுத்துவோரிடம் மென்மையாகவும், மிருதுவாகவும் நடந்து கொள்வதன் மூலம், அவர்களிடையே காணப்படும் அடக்குமுறை, தொந்தரவு போன்ற அச்ச உணர்வுகளை போக்க வேண்டும். வரி ஏய்ப்பாளர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் உள்ளன. இதற்கு அஞ்சும் அவர்கள், வரி அதிகாரிகளை பார்த்து அச்சப்படும் நிலை இருக்கக்கூடாது.

வரி வசூல் தொகையை அதிகரிக்க நீங்கள் ‘விட்டுக்கொடுத்தலை’ கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும். மாறாக ஏய்ப்பாளர்களாக இருக்கக்கூடாது. அத்துடன் வரித்துறையின் 5 தூண்களான வருவாய், பொறுப்பு, நேர்மை, தகவல், டிஜிட்டல் மயம் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை 5.43 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்த வேண்டும்" என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ