Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழைக்காக சிறுவனை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்! -கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் (வீடியோ)

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மழை வேண்டி கிராம மக்கள், ஒரு சிறுவனை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ, தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில், வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பந்தரஹள்ளி கிராமத்தில், மழை வேண்டி ஒரு சிறுவனை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர்.

இந்த நிர்வாண பூஜை, கடந்த ஜூன் 10-ம் தேதி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில், வறட்சி ஏற்படும் மாவட்டங்களில் ஆண்டுதோறும் இதுபோன்ற நிர்வாண பூஜைகள் நடைபெறுவது வாடிக்கையானதுதான் என்று கூறப்படுகிறது.


சித்ரதுர்கா மாவட்டம், பந்தரஹள்ளி கிராமத்தில் நடைபெற்றுள்ள இது தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
 
இந்த செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என பலதரப்பினரும் குரல் எழுப்பி வந்தாலும், இதுதொடர்பாக மாநில அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை எனப் புகார் தெரிவிக்கிறார்கள்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ