Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிங்கங்களுடன் செல்ஃபி... சிக்கலில் ரவீந்திர ஜடேஜா!

கிர்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா, சிங்கங்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வனத்துறை, விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா -  ரீவா சோலங்கி திருமண நிகழ்ச்சியின்போது கேளிக்கைக்காக ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அது குறித்து காவல்துறையின் விசாரணையும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா, தனது மனைவி ரீவா சோலங்கியுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அங்குள்ள சிங்கங்கள் சரணாலயத்தை வாகனத்தில் சென்று சுற்றிப் பார்த்தபோது, அவரும், அவரது மனைவியும் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி புகைப்படம் எடுத்துள்ளனர்.

மேலும், ஜடேஜா தனக்கு பின்புறமாக சுமார் 12 அடி தூரத்தில் சிங்கங்கள் இருக்கும் வகையில் செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். கிர் காடுகளில் சிங்கங்கள் வசிக்கும் பகுதிகளில் வாகனத்தில் இருந்து இறங்கக் கூடாது என விதி இருக்கும்போது, விதிமுறைகளை மீறி ரவீந்திர ஜடேஜா சிங்கங்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்த வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close