Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போர் விமானங்களிலும் இனி பெண்கள்!

புதுடெல்லி: 82 ஆண்டு கால விமானப்படை வரலாற்றில் போர் விமானங்களை இயக்குவதற்கு முதன் முறையாக மூன்று பெண் பைலட்டுகள் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

போர் விமானங்களை இயக்குவதில் சில காரணங்களினால் பெண்களுக்கு தடை இருந்தது. அந்த தடையை கடந்த அக்டோபர் மாதத்தில் மத்திய அரசு நீக்கியது.

அதன்படி 20 வயதுக்கு மேற்பட்ட மூன்று பைலட்டுகளை விமானப்படை தேர்வு செய்தது. பிகாரைச் சேர்ந்த பவானா காந்த், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அவானி சதுர்வேதி, ராஜஸ்தானைச் சேர்ந்த மோகனா சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் மூவருக்கும் ஹைதராபாத்தில் உள்ள ஹக்கிம்பெட் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. சுமார் 150 மணி நேரம் போர் விமானங்களை அவர்கள் இயக்கினர். இதற்காக ரூ.15 கோடி ரூபாய் அரசு செலவழித்துள்ளது. இந்த பெண் பைலட்டுகள் கடந்த ஆறு மாதமாக அட்வான்ஸ்டு ஃபைட்டர் - பிரிட்டிஷ் தயாரிப்பான ஹாக் ரக போர் விமானங்களில் பயிற்சி எடுத்துள்ளார்கள்.

விமானப்படையில் பெண்களால் வெற்றிகரமாக செயல்பட முடியுமா என்பதற்கான முன்னோட்ட சோதனையின் அடிப்படையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவர்கள் பணியற்றுவார்கள்.

புதியதாக சேர்ந்துள்ள 3 பைலட்டுகளைச் சேர்த்து, இந்திய ராணுவத்தில் மொத்தம் 8,350 பெண்கள் பணியாற்றுகிறார்கள். இதில், ராணுவத்தில் உள்ள செவிலியர்களும் அடங்குவார்கள்.

எடிட்டர் சாய்ஸ்