Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரகுராம்ராஜன் போன்ற அறிவாளிகள் மோடிக்கு தேவையில்லை: ராகுல்காந்தி கடும் தாக்கு!

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எல்லாம் தெரியும். அவருக்கு ரகுராம் ராஜனை போன்ற அறிவாளிகள் தேவையில்லை என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் ஒரு இந்தியர் இல்லை. அவரால் இந்திய பொருளாதாரம் நலிவடைந்து விட்டது. எனவே, அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதோடு, செய்தியாளர்களிடமும் இதை தெரிவித்தார்.

இந்நிலையில், ''நான் கவர்னர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. மீண்டும் ஆசிரியர் பணிக்கே செல்ல விரும்புகிறேன்'' என ரகுராம் ராஜன் கூறியிருந்தார். இதையடுத்து, ''புதிய கவர்னர் விரைவில் அறிவிக்கப்படுவார்'' என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். இதன்மூலம் ரகுராம் ராஜன் மீண்டும் கவர்னர் பதவியில் அமர்த்தப்பட மாட்டார் என்பது உறுதியாகியிருக்கிறது.

மேலும், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உர்ஜித் படேல், ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ரிசர்வ் வங்கியில் புணிபுரிந்த ராகேஷ் மோகன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் சுபிர் கோகர்ன், தேசிய பங்குச்சந்தையின் தலைவர் அசோக் சாவ்லா, பொருளாதார நிபுணர் விஜய் கெல்கர் ஆகியோர் பெயர் புதிய கவர்னர் பதவிக்கு பரிசீலனையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில், ''நாட்டின் கடினமான பொருளாதார சூழல்களின் போது மிகவும் சிறப்பாக பணியாற்றிய ரகுராம் ராஜனுக்கு எனது நன்றி. உங்களைப் போன்றவர்களால்தான் இந்தியாவை வலிமைப்படுத்த முடியும்.

பிரதமர் மோடிக்கு எல்லாம் தெரியும். அவருக்கு ரகுராம் ராஜன் போன்ற அறிவாளிகள் தேவையில்லை'' எனக் கூறியுள்ளார்.

இதேபோல், ரகுராம் ராஜன் வெளியேறினால், அது இந்திய பொருளாதாரத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனவும், இந்திய பொருளாதாரத்திற்கு துக்கமான நாள் எனவும், அயல்நாடுகளில் இந்தியாவின் மதிப்பு குறையும் எனவும் பல்வேறு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close