Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுங்கத்துறையிடமிருந்த ரூ.9 லட்சம் கடத்தல் தங்கம் திடீர் மாயம்! -போலீஸ் தீவிர விசாரணை

புதுடெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, சுங்கத் துறை பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 9 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் திடீரென மர்மமான முறையில் மாயமாகி உள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கத்தை, அங்குள்ள சுங்கத் துறைக்கு சொந்தமான பெட்டகத்தில் பாதுகாப்பாக வைப்பது வழக்கம். அதன்படி, பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 1.30 கிலோ எடையுள்ள தங்கத்தை, விசாரணை நடைமுறைகளுக்காக அதிகாரிகள் சமீபத்தில் சோதனையிட்டனர்.

அப்போது, சில போலி தங்க சங்கிலிகள், வளையல்கள் அதில் இருப்பது கண்டறியப்பட்டது. 298 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலிகள் மற்றும் தங்க வளையல்களை, யாரோ எடுத்துவிட்டு அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்திருப்பது தெரிந்திருக்கிறது.

உடனே இதுகுறித்து விமான நிலைய போலீஸாரிடம் சுங்க அதிகாரிகள் புகார் செய்துள்ளனர். சுங்கத் துறை ஊழியர்களில் யாரோ ஒருவர்தான், இந்தச் செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் போலீசார், அவர்களை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி விமான நிலையத்தின் சுங்கத் துறை பெட்டகத்தில் இருந்து தங்கம் மாயமாவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் சுமார் 23 கிலோ தங்கமும், 11 கிலோ தங்கமும் பெட்டகத்தில் இருந்து மாயமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ