Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராகுலை பிரதமராக்க பாடுபடுங்கள்! -காங். தொண்டர்களுக்கு முதல்வர் நாராயணசாமி அட்வைஸ்

புதுச்சேரி: ராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் என்று காங்கிரஸ். தொண்டர்களுக்கு முதல்வர் நாராயணசாமி அட்வைஸ் வழங்கினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் 46 ஆவது பிறந்த நாள் விழா, புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில், முதல்வர் நாராயணசாமி 46 கிலோ கேக்கை வெட்டி தொண்டர்களுக்கு வழங்கிப் பேசியபோது, ''புதுவையில் கடந்த ஆட்சியாளர்களின் கோப்புகளைப் பார்த்தால் பல முறைகேடுகள் வெளிவருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக காரைக்கால் பக்கம் அவர்கள் செல்லவே இல்லை. காரைக்காலில் பல்வேறு துறைகளில் குளறுபடிகள் உள்ளன. அதனை எல்லாம் சரிசெய்ய வேண்டும். அமைச்சர்கள் தங்கள் துறைகளில் சுதந்திரமாகவும் சிறப்பாகவும் பணியாற்றாத பட்சத்தில்தான் நான் தலையிடுவேன்.

ஆளுநரையும் நாம் அரவணைத்துச் செல்ல வேண்டும். நிர்வாகத்தில் அவர் செயல்பாடுகளைப் பார்த்து அதன்படி செயல்படுவோம். அமைச்சர்களோடு நான் டெல்லி சென்று பிரதமர், மத்திய அமைச்சர்களைச் சந்தித்து கூடுதலாக நிதி பெற திட்டமிட்டுள்ளேன்.

அண்டை மாநிலத்தோடும் சுமுக உறவு வைக்க வேண்டும். தமிழகத்தில் ரமலான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுவதுபோல, புதுவையிலும் வருகின்ற 6 ஆம் தேதி வரை வழங்கப்படும் என காரைக்காலில் அமைச்சர் ஷாஜகான் அறிவித்துள்ளார். அந்தத் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும்.

ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார். அவரை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வருகின்ற 2019 ஆம் ஆண்டில் அவர் பிரதமராக நாம் பாடுபட வேண்டும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close