Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண் போலீஸ் அதிகாரியை மீண்டும் வம்புக்கு இழுத்து வாங்கிக்கட்டிக்கொண்ட வீராங்கனை! (வீடியோ)

டந்த சில நாட்களுக்கு முன்பு,  ஹரியானா மாநிலத்தில் நடந்த காட்சிப் போட்டியொன்றில்,  சவால் விட்டு  கடுமையாகப் பேசிய மல்யுத்த வீராங்கனையை பலமாகத் தாக்கி,  சில நொடிகளில் பாடம் கற்பித்த பெண் போலீஸ் அதிகாரியை மீண்டும் வம்புக்கு இழுத்து தாக்கிய வீராங்கனையால்  இணையத்தைக் கலக்கி வருகிறது இன்னொரு வீடியோ.

இந்திய அளவில் முதல் தொழில்முறை பெண் மல்யுத்த வீராங்கனையாக இருப்பவர் பிபி புல் புல். ஜலந்தர் நகரில்,   மல்யுத்த பொழுதுபோக்கு மையத்தில் நடந்த காட்சி சண்டை நிகழ்ச்சியில், சவால் விட்டு அழைத்த புல் புல்லை ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி கவிதா,   சில நொடிகளிலேயே தாக்கி வீழ்த்தி பரபரப்பினை ஏற்படுத்தினார். கவிதா, பளு தூக்குதல் மற்றும் கலப்புத் தற்காப்பு கலை சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் மோதிய மல்யுத்தக் காட்சி  இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கியது.

இந்நிலையில், அதே நாளன்று வீழ்த்தப்பட்டு வெறுப்பில் இருந்த வீராங்கனை புல் புல்,  கவிதாவை பின்பக்கமாகத் தாக்கி தலைமுடியைப் பிடித்து இழுத்து வம்பு செய்து மோதினார். அதிலும் அவர் இறுதியில் வீழ்த்தப்பட்டார்.

அந்த வீடியோ இங்கே...

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ