Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொல்லை விலங்குகளை கொல்ல மத்திய அரசு முடிவு; தடை விதிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: மனிதர்களுக்கு தொல்லை தரும் "நீல்கய்' வகை மான்கள், குரங்குகள், காட்டுப் பன்றிகள் ஆகிய விலங்குகளைக் கொல்வதற்கு அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

பிகார், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் முறையே "நீல்கய்' வகை மான்கள், குரங்குகள், காட்டுப் பன்றிகள் ஆகிய வனவிலங்குகளை, மனிதர்களுக்கு தொல்லை தரும் விலங்குகளாக அறிவித்து, அவற்றைக் கொல்வதற்கு மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கெளரி மெளலேகி மனு தாக்கல் செய்தார்.

'எவ்வித விசாரணையுமின்றி விலங்குகளைக் கொல்வற்கு அனுமதியளிப்பது சட்ட விரோதச் செயலாகும். இது, அரசின் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது. "நீல்கய்' வகை மான்களும், காட்டுப் பன்றிகளும் சுற்றுச்சூழல் சமநிலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற உண்மையை மத்திய அரசு புறந்தள்ளி விட்டது' என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் ஆனந்த் குரோவர், சித்தார்த் லுத்ரா ஆகிய இருவரும் வாதிடுகையில், ""வனவிலங்குகள் குறித்து அறிவியல்பூர்வமான ஆய்வு எதையும் மேற்கொள்ளாமல், மத்திய அரசு அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது. எனவே அந்த அறிவிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்'' என்று வாதிட்டனர்.

 

எனினும், 'விலங்குகள் நல ஆர்வலர்களின் மனுக்களை பரிசீலிப்பதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை  ஜூலை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், விலங்குகள் நல ஆர்வலர்கள், தங்களது கோரிக்கைகளை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், அந்தக் கோரிக்கைகள் தொடர்பாக, மத்திய அரசு 2 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close