Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போல உணர்ந்தேன்...!' - சல்மான் கருத்தால் சர்ச்சை

'சுல்தான்' படப்பிடிப்பு முடிந்தவுடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போல உணர்ந்ததாக நடிகர் சல்மான் கான் கூறியது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, சல்மான் கான் நடிப்பில் வெளியாகவுள்ள 'சுல்தான்' திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் சல்மான் கான்,  'சுல்தான்' திரைப்பட படப்படிப்பு குறித்த தனது அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

திரைப்படத்தில் இடம்பெறும் மல்யுத்தத காட்சிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த சல்மான் கான் "மல்யுத்த காட்சிகள் குறித்த படப்படிப்பு மிகவும் கடுமையாக இருந்தது.120 கிலோ எடைகொண்ட ஒரு மல்யுத்த வீரரை, 5 விதமான கேமிரா ஆங்கிளில் 10 முறை தூக்க வேண்டி இருந்தது.

கிட்டத்தட்ட 7 மணிநேரம் மல்யுத்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படப்பிடிப்பு முடிந்த வெளியேறியவுடன்,  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போல நடக்க முடியாமல் தவித்தேன். என்னால் சிறிது தூரம் கூட நடக்க முடியவில்லை" என்று தெரிவித்தார்.

சல்மான் கானின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  சல்மானின் கருத்து பெண்களை இழிவுபடுத்துவதாக பல்வேறு மாதர் அமைப்புகள், அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ