Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆம்னிவேன்- பஸ் மோதலில் 8 பள்ளிக் குழந்தைகள் பலி

கர்நாடாகாவில் ஆம்னிவேன் மீது பஸ் மோதியதில்  8 பள்ளிக் குழந்தைகள் பலியாகினர்.

பெங்களுருவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குந்தாபுரா என்ற இடத்தில், இன்று காலை 8 மணியளவில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆம்னி வேன் மீது, பேருந்து மோதியது. விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில்  8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே  பலியாகினர். மேலும் 12க்கும் மேற்பட்ட குழந்தைகள்  படுகாயமுற்றனர்.

காயமடைந்த குழந்தைகள், மணிபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடுப்பியில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் இந்த குழந்தைகள் படித்து வந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் கதறியழுதது காண்போரை சோகத்திற்குள்ளாக்கியது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ