Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நில ஊழல்: சந்திரபாபு நாயுடுக்கு எதிராக சென்னையில் போராட்டம்!

ஹைதராபாத்: மகாபலிபுரம் அருகே இருந்த ஆந்திர கோயிலுக்கு சொந்தமான நிலத்தை விற்றதில் ஊழல் நடந்திருப்பதாகக்கூறி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு எதிராக, ஜெகன்மோகன் ரெட்டி சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னையை அடுத்த, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சத்தியபாமா கல்லூரிக்கு பின்னால், 89 ஏக்கர் நிலம் இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு தாலுக்கா, தாழம்பூர் கிராம முகவரியில் இந்த நிலம் வருகிறது. குண்டூர் மாவட்டத்தில் உள்ள புதிய தலைநகரமான அமராவதியின் நுழைவாயிலில் உள்ள அமிர்தலிங்கேஸ்வர சாமி கோயிலுடன் தொடர்புடைய சடாவர்த்தி சத்திரத்துக்கு சொந்தமான நிலம் அது.

ஆரம்ப காலத்தில் 690 ஏக்கர் நிலம் இருந்ததாம். படிப்படியாக சென்னை வி.ஐ.பி.கள் பலரும் இந்த நிலத்தை ஆக்கிரமித்து ஸ்வாகா பண்ணிவிட்டார்களாம். ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டுத்தரும்படி தமிழக அரசிடம்,  கடந்த 15 வருடங்களாக ஆந்திர மாநில அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தவண்ணம் இருக்கிறார்கள். அடிக்கடி சென்னைக்கு விசிட் செய்து, மனுகொடுத்துவிட்டுப் போவார்களாம்.

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆந்திராவில் புது அமைச்சரவை பதவி ஏற்றது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, ஆக்கிரமிப்பு போக எஞ்சியிருந்த 89 ஏக்கர் நிலத்தை ஆந்திர அரசின் சார்பில் ஏலம் விட்டிருக்கிறார்கள். பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை, சில லட்சங்களுக்கு விலை போனதாக சொல்லியிருக்கிறார்கள். இதைக்கேட்டு கொந்தளித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி , ஆந்திராவில் இதுதொடர்பாக பிரஸ்மீட் நடத்தி, இந்த நிலம் ஏலம் விடப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக சந்தேகப்படுவதாக சொன்னார்.

அடுத்தகட்டமாக, அந்த நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு என்ன...? எவ்வளவு குறைவாக அந்த நிலம் விற்கப்பட்டிருக்கிறது? அரசுக்கு எவ்வளவு நஷ்டம்? பணம் பலன் அடைந்த வி.ஐ.பி.கள் யார் என்பதையெல்லாம் விசாரித்து அறிய சென்னைக்கு வர உள்ளார்.

நில விவகாரத்தின் முழு தகவல்களை சேகரித்துக்கொண்டு, அன்றைய தினமே சென்னையில் பத்திரிகையாளர்களை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம்  ஜெகன்மோகன் ரெட்டி . ஒருவேளை அவரால் வரமுடியவில்லை என்றால், கட்சியின் சீனியரான தரமனா பிரசாத ராவ் வர இருக்கிறாராம்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ