Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னை மிரட்ட நான் ராகுல் காந்தியோ, சோனியா காந்தியோ அல்ல! -மோடி மீது கெஜ்ரிவால் தாக்கு

புதுடெல்லி: என்னை அச்சுறுத்தி பார்க்க நான் ஒன்றும் ராகுல் காந்தியோ, சோனியா காந்தியோ அல்ல என்று கடுமையாக பிரதமர் மோடியை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தாக்கி உள்ளார்.

தண்ணீர் லாரிகள் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் விசாரிக்கப்படுவர் என்று டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறைத் தலைவர் எம்.கே.மீனா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கெஜ்ரிவால், ''பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக திங்கட்கிழமை சுட்டுரையில் கருத்து வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து, தண்ணீர் லாரிகள் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக எனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோடி எனது அலுலகத்தில் சி.பி.ஐ.யை கொண்டு 6 மாதங்களுக்கு முன் திடீர் சோதனை நடத்தினார். ஆனால், எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை. சி.பி.ஐ. சோதனைக்கு எதிராக நீதிமன்றமும் ஆட்சேபனை வெளியிட்டு, கண்டித்துள்ளது.

சி.பி.ஐ. சோதனையைப்போல, தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரும் போலியானதாகும். இந்த எஃப்.ஐ.ஆர். மூலம் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை. சோதனைகள், பொய் வழக்குகள், மிரட்டல்கள் ஆகியவற்றின் மூலம் மக்களை மோடி அரசு அச்சுறுத்தி வருகிறது. ஆனால், நான் மட்டுமே பாறைபோல உறுதியாக நின்று மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறேன், போராடி வருகிறேன்.

அதனால்தான் என்னை மிரட்டவும், பயமுறுத்தவும், தகர்க்கவும் மோடி விரும்புகிறார். ஆனால், என்ன செய்தாலும் நான் வளைந்து கொடுக்கவோ, உடைந்துபோகவோ, பின்வாங்கவோ மாட்டேன். என்னை அச்சுறுத்திப் பார்க்க, நான் ராகுல் காந்தியோ, சோனியா காந்தியோ அல்ல. ரகசிய உடன்பாடு செய்துகொள்ள நான் ராபர்ட் வதேராவும் அல்ல. நான் நேர்மையற்ற செயல்களில் ஈடுபடமாட்டேன்.

எத்தனை முறை வேண்டுமானும், சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்புத் துறை போன்ற விசாரணை அமைப்புகளைக் கொண்டு சோதனை நடத்திக் கொள்ளுங்கள். முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்து கொள்ளுங்கள். என்னை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close