Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே நாளில் இடி மின்னலுக்கு 70 பேர் பலி

பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் இடி மின்னலுக்கு  ஒரே நாளில் 70 பேர் பலியாகியுள்ளனர்.

பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதில் கடந்த 24 மணி நேரத்தில் இடி மின்னல் தாக்கியதில் 50 பேருக்கு மேற்பட்டவர்கள் பீகாரில் இறந்து போயுள்ளனர்.

இதில் 47  இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் வழங்க பீகார்  அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், அம்மாநில பேரிடர் மீட்புக்குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பீகாரில்  அக்டோபர் ஜுலை மாதத்தில்  கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்வது வழக்கம். இந்த சமயத்தில் உயிரிழப்புகள் அதிகமாகவே இருக்கும். பாட்னாவில் மட்டும் 16 பேர் அதிகபட்சமாக பலியாகியுள்ளனர். உத்தரபிரதேசத்திலும் இடிமின்னலுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டில் அதிகபட்சமாக இடி மின்னலுக்கு 2,500 பேர் பலியாகினர்.


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close