Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கதகளி' படத்திற்கு சென்சார் சான்று மறுப்பு: நீதி வேண்டி நிர்வாண பாடல்!

'தகளி'  என்ற மலையாள படத்தில் நிர்வாண காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி சென்சார் போர்டு அந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர மறுப்பு தெரிவித்து விட்டது. கடந்த வாரத்தில் இந்த படத்தின் இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், சென்சார் போர்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 


சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட ஒருவன், தனக்கென்று தனி அடையாளத்திற்காக சமுதாயத்தை எதிர்த்து போராடுவதுதான் கதை. ஆனால் இறுதியில் போராட முடியாமல் ' கதகளி' ஆடைகளை களைந்து விட்டு, 
முடிவில்  நிர்வாணமாக ஒரு ஆற்றுக்குள் இறங்குவது போல காட்சிகள்  அமைக்கப்பட்டிருக்கின்றன.

சிஜோ இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்சார் போர்டை கண்டித்தும் யூ டியூப்பில் வீடியோவும்  வெளியிட்டுள்ளனர்.  அதற்கு,  'கதகளிக்கு நீதி வேண்டி ஒரு நிர்வாண பாடல்'  என பெயரிடப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ