Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆர்.எஸ்.எஸ்.க்கும் டி காப்ரியோவுக்கும் என்ன தொடர்பு?

ண்டன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஆஸ்கர் விருதை வென்ற நடிகர் டி காப்ரியோவை சந்திக்கவுள்ளார்.

பிரிட்டனில் இயங்கி வரும்,  இந்து ஸவயம் சேவக் சங்கம், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பவக்தை லண்டனில் நடக்கவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக வருகிற ஜூலை மாதம் 30 மற்றும் 31 ம் தேதிகளில் மோகன் பகவத் லண்டன் செல்கிறார். மோகன் பகவத்தின் லண்டன் பயணத்தின் போது, அவரை இரு உலக பிரபலங்கள் சந்திக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஒருவர் ஆஸ்கர் விருதை வென்ற டி காப்ரியோ, இன்னொருவர் இங்கிலாந்து தொழிலதிபர் பிரான்சன். இந்த இருவருமே சுத்த சைவம். அந்த வகையில் மாடுகளை கொல்வதற்கும் மாட்டிறைச்சி விற்பதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது இவர்களுக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. 

அந்த வகையில்தான் டி காப்ரியோ, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத்தை சந்திக்கவுள்ளதாகத் தெரிகிறது. நடிகர் டி காப்ரியோவும் சில ஆண்டுகளாக உயிர்களை வதைப்பதற்கும், அசைவம் சாப்பிடுவதற்கும் எதிராக விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ