Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராகுல் சென்றுள்ள நாடு பற்றி தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு! -விஜேந்திர சிங் சிசோடியா அறிவிப்பு

போபால்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்றிருக்கும் நாடு பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பா.ஜ.க. பிரமுகர் விஜேந்திர சிங் சிசோடியா அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தற்போது வெளிநாடு சென்றுள்ள நிலையில், மத்தியப் பிரதேச பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் விஜேந்திர சிங் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ராகுல் காந்தி எந்த நாட்டுக்குச் சென்றிருக்கிறார் என்பது குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு எனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் பரிசு தரக் காத்திருக்கிறேன்.

எந்த நாட்டுக்குச் செல்கிறார் என்பதைத் தெரிவிக்காமல், ராகுல் காந்தி வெளிநாடு செல்வது ஏன்? எனத் தெரியவில்லை. இதற்கு முன்பு ஒருமுறை ராகுல் காந்தி வெளிநாடு சென்றபோது, அவர் 'புத்துணர்வு' பெறுவதற்காக வெளிநாடு சென்றதாக காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்தது.

இந்த முறை ராகுல் காந்தி எந்த நாட்டுக்குச் சென்றிருக்கிறார்? வெளிநாட்டுப் பயணங்களின்போது அவர் எப்படி 'புத்துணர்வு' பெறுகிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு இந்த தேசமே விரும்புகிறது" என்று குறிப்பிட்டு உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ