Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறைக்கைதிகள் நடத்தும் எப்.எம்... மகாராஷ்ட்ராவில் விரைவில் தொடக்கம்!

மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலம், தானே சிறைக் கைதிகள் நடத்தும் எப்.எம். ரேடியோ விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, தானே சிறை கண்காணிப்பாளர் ஹிராலால் ஜாதவ் கூறுகையில், ''தானே சிறையின் சார்பில் எப்.எம். ரேடியோ விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக அரசிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது.

தானே மற்றும் மும்பை முழுவதும் இந்த எப்.எம். ரேடியோ ஒலிபரப்பாகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சனை வைத்து இந்த ஒலிபரப்பை தொடங்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்த எப்.எம். ரேடியோவை, தானே சிறையில் உள்ள கைதிகளே நடத்த உள்ளனர்'' என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ