Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொடியிறக்கும் நிகழ்ச்சியில் இந்திய-பாக். வீரர்கள் கைகலப்பால் பரபரப்பு! (வீடியோ)

சண்டிகர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தினமும் நடக்கும் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.நேற்று (வியாழன்) நடந்த கொடி இறக்கும் நிகழ்ச்சியின்போது பாகிஸ்தான் மற்றும் இந்திய வீரர்களுக்குள் எதிர்பாராத விதமாக கைகலப்பு நடந்துள்ளது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், சண்டிகர் அருகே உள்ள வாஹா எல்லைப் பகுதியில் இந்தியா, பாகிஸ்தான்  எல்லைக்கோடு  அமைந்துள்ளது. இங்கு தினமும் காலையில் இருநாட்டு வீரர்களும் கொடியேற்றி எல்லைக்  கதவைத் திறப்பதும், பின் மாலையில் கொடியை இறக்கி எல்லைக்  கதவை மூடுவதும் வழக்கம்.

இந்நிலையில் நேற்று மாலையும் வழக்கம்போல இருநாட்டு வீரர்களும் கொடியை முறைப்படி இறக்கியுள்ளனர். அப்போது ஏற்பட்ட சிறிய மோதலைத் தொடர்ந்து, எதிர்பாராதவிதமாக இருநாட்டு வீரர்களும் ஒருவரை ஒருவர் கைகளால் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். அந்தக் காட்சிகளை  பார்வையாளர் ஒருவர் தனது மொபைல் கேமிராவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.   

அந்த வீடியோ இங்கே..

.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ