Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

116 வயதில் நேதாஜியின் பாதுகாவலருக்கு கிடைத்த கவுரவம்!

நேதாஜியின் கார் ஓட்டுநரும் பாதுகாவலருமான நிஜாமுதீனுக்கு, சுதந்திரப் போராட்ட வீரர் என்ற அங்கீகாரத்தை வழங்க, அவரது 116 வது வயதில் மாவட்ட நிர்வாகம் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.  

இந்திய தேசிய ராணுவத்தின் தலைவராக நேதாஜி இருந்தபோது, அவருக்கு டிரைவராகவும் பாதுகாவலராகவும் இருந்நதவர் கர்னல் நிஜாமுதீன். தற்போது இவருக்கு 116 வயதாகிறது. உத்தரபிரதேச மாநிலம், அசம்கார்  மாவட்டத்தில் உள்ள தக்வா எனும் கிராமத்தில், குடும்பத்தினருடன்  வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். தற்போது, இளைய மகன் ஷேக் அக்ரமின் பராமரிப்பில் நிஜாமுதீன் இருக்கிறார்.

இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்திருந்தாலும்,   நேதாஜியின் ஓட்டுநராகவும் பாதுகாவலராகவும்  இருந்ததற்கான எந்தவிதமான ஆதாரமும் நிஜாமுதீனிடம் இல்லை . இதற்கிடையே தன்னை சுதந்திரப் போராட்ட வீரராக அங்கீகரிக்க வேண்டி, அசம்கார் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 2013 ம் ஆண்டு நிஜாமுதீன் விண்ணப்பித்திருந்தார். மாவட்ட நிர்வாகம் ஆதாரம் கேட்க, நிஜாமுதீனிடம் அளிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதன் காரணமாக நிஜாமுதீனுக்கு 'சுதந்திரப் போராட்ட வீரர் ' என்ற அங்கீகாரத்தை வழங்குமாறு பரிந்துரைக்க, அசம்கார் மாவட்ட நிர்வாகம் கடந்த 3 ஆண்டுகளாக மறுத்து வந்தது.

இந்த நிலையில் தற்போது அசம்கார் மாவட்ட ஆட்சியர், நிஜாமுதீனுக்கு சுதந்திரப் பேராட்ட வீரருக்கான அங்கீகாரத்தை  வழங்குவதற்கு மாநில அரசிடம் பரிந்துரைத்திருப்பதாக அறிவித்துள்ளார். இந்திய தேசிய ராணுவத்தில் நிஜாமுதீன் பணியாற்றியதையும் நேதாஜியின் நம்பிக்கைக்கு  உரியவராகவும் திகழ்ந்ததையும்  உறுதி செய்த பின்னரே,  மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து சுதந்திர போராட்ட வீரர் நிஜாமுதீனின் மகன் ஷேக் அக்ரம் கூறுகையில்,''  எனது தந்தை நேதாஜியிடம் பணிபுரிந்ததற்கான ஆதாரம் எதுவும் எங்களிடம் இல்லை. எங்கள் கிராம மக்கள் அளித்த வாக்குமூலத்தை வைத்து தற்போது அவருக்கு கவுரவமிக்க இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது '' என்றார்.

கடந்த 2014 ம் ஆண்டு வாரணாசியில் நடந்த பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடி,  கர்னல் நிஜாமுதீனின் காலில் விழுந்து வணங்கியது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close