Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: 8 வீரர்கள் உயிரிழப்பு

பேம்பூர்: பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளும் இடையே நடைபெற்ற சண்டையில் 8 ராணுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் உள்ள பேம்பூர் பகுதியில், இச்சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது வழக்கமான பயிற்சியை முடித்துவிட்டு பேருந்து ஒன்றில் திரும்பிக்கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதனையடுத்து பாதுகாப்புப்படை வீரர்களும் தக்கப் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே சமயத்தில்  பாதுகாப்புப்படை வீரர்கள் 8 பேர்  வீரமரணம் அடைந்தனர்.  20 வீரர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீரில், கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் மறைந்து இருந்து பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ