Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சோலார் பேனல் மோசடி வழக்கு: இன்று கைதாவாரா சரிதா நாயர்?

திருவனந்தபுரம்; இன்று நடைபெறவுள்ள சோலார் பேனல் மோசடி வழக்கின் விசாரணையில் ஆஜராகவில்லையென்றால் சரிதா நாயரை கைது செய்ய, விசாரணை ஆணையம் பிறப்பித்துள்ள வாரன்ட்டினால் கேரளாவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது

கேரளாவில் சோலார் பேனல் பதிக்கும் நிறுவனத்தை பிஜு ராதாகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து தொடங்கியவர் சரிதா நாயர். இதில் கோடிக்கணக்கில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. மேலும் வழக்கு பதியப்பட்டது.

இந்த மோசடியில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கும் பங்கிருப்பதாக சரிதா நாயர் பகிரங்கமாக புகார் கூறினார். இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த மோசடி குறித்து நீதிபதி சிவராஜன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில்“ உம்மன்சாண்டிக்கு எதிராக ஆதாரங்களை வழங்க கூடாது என மிரட்டும் தொனியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் என பலர் என்னிடம் பேசி வருகிறார்கள். ஆனால் எனக்கு எந்த பயமும் இல்லை. யார் மிரட்டினாலும் நான் பயப்பட போவதில்லை. இந்த உண்மையை நான் வெளியில் கொண்டு வருவேன் 2 ஆண்டுகளாக நான் உம்மன் சாண்டிக்கு ஆதரவாகத்தான் இருந்தேன். அவர்கள் பணத்தை திருப்பிக்கொடுப்பார்கள் என நம்பினேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் கிடையாது. எனக்கு அரசியலும் தெரியாது” என கோவையில் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சரிதா நாயர் கருத்து தெரிவித்திருந்தார்

சரிதா நாயரிடம் ஒருமுறை விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு விசாரணையில் அவர் ஆஜராகவில்லை. பலமுறை எச்சரித்தும் விசாரணைக்கு சரிதா நாயர் வரவில்லை. இதையடுத்து சரிதா நாயரை கைது செய்ய விசாரணை ஆணையம் கடந்த வாரம் ஜாமீனில் வெளிவரமுடியாதபடி கைது வாரன்ட் பிறப்பித்தது. அப்போது விசாரணை ஆணையம், வரும் 27-ம் தேதி நடக்கவுள்ள விசாரணைக்கு ஆணையத்தின் முன்பு சரிதா நாயர் ஆஜராக வேண்டும். தவறினால் அவரை கைது செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தது. 

இதனிடையே விசாரணை ஆணையம் முன் சரிதான நாயர் இன்று ஆஜராவாரா அல்லது கைதாவாரா என கேரளாவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ