Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரகுராம் ராஜன் குறித்த சு.சாமியின் கருத்து...மௌனம் கலைத்தார் மோடி!

புதுடெல்லி: புகழ் பெறுவதற்கான ஆசையால் பேசுவதெல்லாம் நாட்டுக்கு நன்மை விளையப்போவதில்லை என சுப்பிரமணியன் சாமிக்கு பிரதமர் மோடி மறைமுகமாகப் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ''எனது கட்சியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இதுபோன்ற கருத்து தேவையற்றது. புகழ் பெறுவதற்கான ஆசையால் பேசுவதெல்லாம் நாட்டுக்கு நன்மை விளைவிக்காது. தனது கட்சியை விட, தன்னை உயர்ந்தவராக ஒருவர் கருதுவதும் தவறு. கட்சித் தலைவர்கள் பேச்சில் கவனமும், கட்டுப்பாடும் தேவை என நான் ஏற்கெனவே  அனைவரையும் அறிவுறுத்தியுள்ளேன்.

ரகுராம் ரஜனுடனான எனது அனுபவம் நன்றாக இருந்தது. அவர் செய்த பணியைப் பாராட்டுகிறேன். அவருடைய தேசப்பற்றை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதேபோல், அவர் இந்தியாவின் நலனுக்காகப்  பணியாற்றவில்லை என்று கூறுவதும் தவறு. அவர் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்தியாவுக்காகச்  சேவையாற்ற வேண்டும்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close