Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி 24 மணி நேரமும் தியேட்டர் இயங்கும்..! கலகலக்க வைத்த கேபினட் முடிவு


ங்கிகள், திரையரங்குகள், உணவகங்கள், கடைகள் ஆகியவை இனி 24 மணி நேரமும் திறந்திருக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இரவில் பணி செய்யும் பெண்களுக்கு வாகன வசதி செய்து கொடுக்க வேண்டியதைக் கட்டாயமாக்குவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது பெரிய உற்பத்தி நிறுவனங்கள், சேவை துறை சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே 24 மணி நேரம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்ட முன்வரை மூலம் இனி வருங்காலங்களில் திரையரங்குகள், கடைகள், உணவகங்கள், வங்கிகள் உள்ளிட்டவை, இனி 24 மணி நேரமும் திறந்திருக்கும். அதே சமயத்தில் மாநில அரசுகள் இந்த சட்ட முன்வரைவை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு சீராக இதை நடைமுறைப்படுத்தவும், நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த சட்ட வரைவு கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

7 வது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close